அதிகாலையில் உம் திருமுகம் தேடி

அதிகாலையில் உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்கு தந்தேன் – அன்பு நேசரே
ஆராதனை ஆராதனை – 2
அன்பர் இயேசு இராஜனுக்கு
ஆவியான தேவனுக்கு

1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரப்பவேண்டும் – 2
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும் – 2 –ஆராதனை

2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பாக மாற்றும் – 2
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெபவீரன் என்று எழுதும் – 2 –ஆராதனை

3. சுவிசேஷம் பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும் – 2
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்லவேண்டும் – 2 –ஆராதனை

4. உமக்குகந்த தூய பலியாய்
இந்த உடலை ஒப்புக்கொடுத்தேன் – 2
ஆட்கொண்டு என்னை நடத்தும்
ஆவியாலே என்னை நிரப்பும் – 2 –ஆராதனை



athikalaiyil um thirumukam thedi

athikalaiyil um thirumukam thedi
arbpaniththen ennaiye
aaradhanai thuthi sthoththirangkal
abpane umakku dhanththen – anbu nechare
aaradhanai aaradhanai – 2
anpar iyesu irajanukku
aaviyana thevanukku

1. inthdha nalin ovvaru nimidamum
unthdhan ninaival nirabpavendum – 2
en vayin varththai ellam
birar kayam aatra vendum – 2 –aaradhanai

2. unthdhan eekkam virubpam ellam
en idhayath thudibbaka matrum – 2
en jeeva nadkal ellam
japaveeran enru ezhuthum – 2 –aaradhanai

3. suvisesha baram onrey
en sumaiyaka mara vendum – 2
en desha ellaiyengkum
um namam sollavendum – 2 –aaradhanai

4. umakkuukanthdha thooya paliyay
inthdha utalai oppukkoduthen – 2
aadkondu ennai nadaththum
aaviyale ennai nirappum – 2 –aaradhanai